top of page

Tamil

On this page you will find videos with Sub-titles in Tamil. I hope that you will find this helpful.
This is a free programme - please use and share with as many people as possible.

Translations by : Padmapriya T S

 என் உடம்பு என்னோடது

 என் உடம்பு என்னோடது

வணக்கம், என் பேரு சிந்தி. நாம இன்னிக்கி என் உடம்பு என்னோடது அப்படிங்கற நிகழ்ச்சில கலந்துக்க போறோம். பாட்டு பாடி, விளையாடி, நாம எப்படி பாதுகாப்பா இருக்க முடியும்னு தெரிஞ்சிக்க போறோம்.

 

உங்களுக்கு தெரியுமா, நம்ம உடம்பு ரொம்ப சிறப்பானது. யாருக்கும் நம்மை துன்புறுத்தவோ, இல்ல சில  உடல் பாகங்களை தொடவோ, நம்மை சங்கடப்பட வைக்கவோ உரிமை இல்லை. ஏன்னா இது நம்மோட சிறப்பான உடம்பு. இப்போ நாம முதல் பாட்டை பாட போறோம். நீங்களும் என்னோட பாருங்க. இந்த பாட்டு - என் உடம்பு என்னோடது.

 என் உடம்பு என்னோடது

உங்களுக்கு சரின்னு தோணாததை , செய்யாதீங்க

அடுத்த பாட்டு நம்மை குஷி அடைய செய்யும். 

எப்பவும் ஞாபகம் வச்சிக்கோங்க 

என்னன்னா  - உங்களுக்கு சரின்னு தோணாததை செய்யாதீங்க!!

இப்போ வீட்டுப்பாடம் செய்யறது, உங்க அறையை ஒழுங்கு படுத்தறதை பத்தி நான் பேசப்போறேன். 

 

யாரவது உங்களை அவங்களோட, ஒரு இடத்துக்கு வரச் சொன்னாலோ அல்லது உங்களை ஒரு செயலை செய்யச்சொன்னாலோ, அது உங்களுக்கு சரியாக தோணலைனா செய்யாதீங்க.

என் உடம்பு என்னோடது

இது என் உடம்பு, என் உடம்பு, யாருக்கும்  என்னை துன்புறுத்த அதிகாரமில்லை. ஏன்னா என் உடம்பு எனக்கான உடம்பு .

இது என் உடம்பு, என் உடம்பு, யாருக்கும்  என்னை துன்புறுத்த அதிகாரமில்லை. ஏன்னா என் உடம்பு எனக்கான உடம்பு .

 

எனக்கு உணர ரெண்டு கையிருக்கு, பாக்க ரெண்டு கண்ணு,

நீங்க சொல்றத கேக்க இருக்கு ரெண்டு காது,

பலமான ரெண்டு காலிருக்கு நான் எங்கு வேணா செல்ல 

அது போல சில உறுப்பு இருக்கு அது உங்களுக்கு காட்ட இல்ல 

இது என் உடம்பு, என் உடம்பு, யாருக்கும்  என்னை துன்புறுத்த அதிகாரமில்லை. ஏன்னா என் உடம்பு எனக்கான உடம்பு .

 

இது என் உடம்பு, என் உடம்பு, யாருக்கும்  என்னை தொட அதிகாரமில்லை. ஏன்னா என் உடம்பு எனக்கான உடம்பு

 

என் தலையில் முடி இருக்கு அதை நீங்க பாக்கலாம் 

ஒரு குட்டி தொப்புள் இருக்கு என் உடலின் நடுவிலே 

எனக்கு அழகான சின்ன மூக்கு பத்து கால் விரல்கள் 

எனக்கு ஒரு வாயுமுண்டு நான் உங்களுக்கு சொல்ல இது என் உடம்பு, என் உடம்பு 

 

யாருக்கும்  என்னை துன்புறுத்த அதிகாரமில்லை.

ஏன்னா என் உடம்பு எனக்கான உடம்பு .

இது என் உடம்பு, என் உடம்பு

யாருக்கும் என்னை தொட அதிகாரமில்லை

ஏன்னா என் உடம்பு எனக்கான உடம்பு .

ஆமா, இது என் உடம்பு, எனக்கான  உடம்பு

உங்களுக்கு சரின்னு தோணாததை , செய்யாதீங்க

உங்களுக்கு சரின்னு தோணாததை , செய்யாதீங்க

அடுத்தவங்க உங்களை தொடுவதில் சந்தோஷப்படலாம். ஆனால் ஞாபகம் வச்சுக்குங்க, உங்க உடம்பு உங்களுக்கு உரியது. உங்களுக்கு தான் தெரியும் அது உங்களுக்கு சரியாய் தோணுதான்னு . சரியாய் தோணாட்டி செய்யாதீங்க சரியா!

 

சரியாய்  தோணாட்டி செய்யாதீங்க சரியா! செய்யாதீங்க செய்யாதீங்க 

 

சில பேரு  உங்கள முட்டாள்னு நினைப்பாங்க 

உங்களுக்கு போதை குடுத்து, பள்ளிக்கு போகாம தடுக்க 

உங்கள சில விஷயங்களை ரகசியமா வைக்க சொல்ல ஆனா உங்களுக்கு என்ன பண்ணனும்னு தெரியுமே 

உங்களுக்கு சரியாய் தோணாட்டி செய்யாதீங்க சரியா!

 

ஆமா சரியாய்  தோணாட்டி செய்யாதீங்க சரியா! செய்யாதீங்க செய்யாதீங்க 

 

சிலர் உங்களை அணைத்து உங்க மேல அக்கறை காட்டுவாங்க 

அது எல்லாமே தப்புனு நான் சொல்லல

ஆனா உங்களுக்கு அது சரின்னு தோணாட்டி 

 

சரியாய்  தோணாட்டி செய்யாதீங்க சரியா! 

 

ஆமா சரியாய்  தோணாட்டி செய்யாதீங்க சரியா! செய்யாதீங்க செய்யாதீங்க 

ஆமா சரியாய்  தோணாட்டி செய்யாதீங்க சரியா! செய்யாதீங்க செய்யாதீங்க 

ஆமா சரியாய்  தோணாட்டி செய்யாதீங்க சரியா! செய்யாதீங்க!

 "இப்படி நடந்தா" விளையாட்டு 

"இப்படி நடந்தா" விளையாட்டு 

இப்போ நாம "இப்படி நடந்தா" விளையாட்டு விளையாட போறோம் 

இந்த கேள்வி பதில்கள் உங்களுக்காக 

ஒவ்வொரு முறையும் ஜெயிக்க நினைத்தால் 

இதை தான் நீங்க செய்யணும் 

வேண்டாம் , னு சொல்லுங்க வேண்டாம்னு சொல்லுங்க   !

பள்ளிக்கு பிறகு

உங்களுக்கு தெரியாத ஒருவர் உங்களை வீட்டில் விடுகிறேன் என்றால் 

அவங்க ஒரு புதிய பெரிய காரில் வந்து " ஹலோ! கார்ல போலாமா? " னு கேட்டால் 

 

வேண்டாம், உங்களை எனக்கு தெரியாது 

உங்களோட நான் போக மாட்டேன் 

ஏன்னா எங்கப்பா அம்மா சொல்லி இருக்காங்க 

தெரியாதவங்க கூட போக கூடாது! வேண்டாம்! வேண்டாம்னு சொல்லுங்க 

 

சரி, நீங்க வீட்ல இருக்கும் போது 

உங்கள கவனிக்க இருக்கும் பணியாள் 

உங்களை உடைகளுக்கு கீழே தொட்டால் 

நீங்க என்ன செய்யணும்?

வேண்டாம் நீங்க என்னை அங்க தொடக்கூடாது 

ஏன்னா அது என் தனியான பாகம் 

என் உடம்பு உங்களுடையது அல்ல! வேண்டாம்! வேண்டாம்னு சொல்லுங்க!

 

இப்போ நாம "இப்படி நடந்தா" விளையாட்டு விளையாட போறோம் 

இந்த கேள்வி பதில்கள் உங்களுக்காக 

ஒவ்வொரு முறையும் ஜெயிக்க நினைத்தால் 

இதை தான் நீங்க செய்யணும் 

வேண்டாம் , னு சொல்லுங்க வேண்டாம்னு சொல்லுங்க   !

 

சரி இப்போ உங்களுக்கு தெரிஞ்ச ஒருத்தர் 

நண்பரோ இல்ல சொந்தக்காரரோ 

உங்களை தொடவோ துன்புறுத்தவோ முயற்சி பண்ணா 

அல்லது உங்களை சங்கடப்படுத்தினா என்ன சொல்வீங்க ?

நீங்க "வேண்டாம்" னு சொல்லணும்!

அப்படி பண்ணாதீங்க 

நீங்க செய்வது எனக்கு பிடிக்கல 

நீங்க தொடுவது எனக்கு பிடிக்கல 

உங்களை எனக்கு பிடிக்கும் ஆனால் 

என்னை இப்படி செய்யாதீங்க 

ஏன்னா நான் ஒரு சின்ன குழந்தை இல்லையா 

அதுனால வேண்டாம் னு சொல்லுங்க  வேண்டாம்னு சொல்லுங்க 

வேண்டாம்னு சொல்லுங்க!

 "இப்படி நடந்தா" விளையாட்டு 

இப்ப நாம "இப்படி நடந்தா" விளையாட்டு விளையாட போறோம். இது மூலமா நாம உங்களை யாராவது அவங்களோட போக சொன்னாலோ, அல்லது சில தனியான பாகங்களை தொட முயற்சி செய்தாலோ என்ன செய்யணும்னு தெரிஞ்சிக்க போறோம். உங்க தனியான பாகங்கள்னா என்னனு தெரியுமா? அதை தான் உங்க ஜட்டி மறைக்குது. உங்களோட கால்களுக்கு நடுவே உள்ள அந்த தனியான பாகங்களை நீங்க ரொம்ப சின்ன குழந்தையாக இருக்கும் போது உங்க அம்மாவோ அப்பாவோ கழுவி விட்டிருப்பாங்க. அல்லது உடம்பு சரி இல்லேன்னா உங்க அம்மா, அப்பா அல்லது டாக்டர் மருந்து தடவி விட்டிருக்கலாம். ஆனால் இப்போ வேறு யாரும் அந்த பாகங்களை தொட அனுமதிக்கக் கூடாது. 

 

உங்க வீட்டிலேயோ வெளியிலோ யாராவது உங்களை சங்கடப்படுத்தினாலோ அல்லது தனியான பாகங்களை தொட்டாலோ நீங்க "வேண்டாம் " னு சத்தமா கத்தணும் . அதை தான் இந்த விளையாட்டில் நாம பாக்க போறோம்.

உங்களுக்கு ஒரு பிரச்சனை வந்தால் 

யாரவது உங்களை சங்கடப்படுத்தினாலோ, அல்லது தனியான பாகங்களை தொட்டாலோ, நீங்கள் மிக பயந்தாலோ, அல்லது அவமானமாக உணர்த்தாலோ, அதை யாரிடமாவது சொல்ல வேண்டியது மிக அவசியம். 

 

இதை நீங்க உங்கள் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, ஆசிரியர், பக்கத்து வீட்டில் இருப்பவர்கள், நண்பர்கள், போலீஸ்காரர், உங்கள் நண்பர்களின் பெற்றோர், அல்லது மருத்துவரிடம் தெரிவிக்கலாம். சில நேரங்களில் நீங்கள் சொல்பவர், உங்களை நம்பாமல், இந்த விஷயத்தை ரகசியமாக வைத்து கொள்ள சொல்லலாம். ஆனால் நீங்கள் சோர்ந்து விடாமல், மீண்டும் மீண்டும், வேறு யாரிடமாவது சொல்லி அவர்கள் நீங்கள் சொல்வதை கேட்க வைக்க வேண்டும்.

உங்களுக்கு ஒரு பிரச்சனை வந்தால் 
உங்களுக்கு ஒரு பிரச்சனை என்ன செய்யணும்னு தெரியலையா 

யாரிடமாவது சொல்லுங்க அவங்க கேக்கற வரை 

நீங்க உங்க பிரச்சனைகளை கேட்பவரை கண்டு பிடிக்கணும் 

நீங்க உங்க பிரச்சனைகளை யாரிடமாவது சொல்லணும்.

 

உங்க அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி  யாரிடமாவது பேசுங்க உங்க மாமா, மாமி, இல்ல பள்ளியில் ஆசிரியர் 

நீங்க இந்த பிரச்னையை  யாராவது கேக்கும் வரை தொடர்ந்து சொல்லுங்க 

 

உங்களை யாராவது துன்புறுத்தினால், என்ன செய்யணும் னு தெரியலையா போய்  யாரிடமாவது சொல்லுங்க அவங்க நீங்க சொல்றதை கேக்கும் வரை 

நீங்க உங்க பிரச்சனைகளை கேட்பவரை கண்டு பிடிக்கணும் 

நீங்க உங்க பிரச்சனைகளை யாரிடமாவது சொல்லணும்.

 

உங்க பக்கத்துவீட்டுக்காரரோ, இல்ல பள்ளி வழிகாட்டியோ,

உங்களுக்கு நம்பகமான தெரிந்தவருடன் 

உங்கள் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்வது அவசியம் 

நீங்கள் சொல்வதை கேட்கும் வரை தொடர்ந்து சொல்லுங்க 

நீங்க உங்க பிரச்சனைகளை கேட்பவரை கண்டு பிடிக்கணும் 

நீங்க உங்க பிரச்சனைகளை யாரிடமாவது சொல்லணும்.

அன்பு மென்மையானது 

சரி, இப்போ நாம அன்பை பற்றி பேசலாம். நாம் நேசிக்கப்படுவது மிக முக்கியம்.
ஆனால் உங்கள் மீது அன்பு கொண்டவர் உங்களை துன்புறுத்தியோ சங்கடப்படுத்தியோ அதை வெளிப்படுத்த மாட்டார்.
உங்களுடன் விளையாடுவது, புத்தகங்கள் படிப்பது, நடைப்பயிற்சி செய்வது, உங்களுக்கு சைக்கிள் ஓட்ட கத்துக்கொடுப்பது  போன்ற உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்தே மக்கள் தங்கள் அன்பினை வெளிப்படுத்துவர். 

 

அன்பு என்பது ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டு நேசிப்பது. நம் பெற்றோர் மற்றும் பாதுகாவலர் நாம் சுத்தமாக  இருக்கிறோமா, தூய்மையான உடைகளை அணிகிறோமா, ஆரோக்கியமாக இருக்கிறோமா என்று கவனித்து நாம் ஆரோக்கியமாக, சந்தோஷமாக, உடல் உறுதியுடன் வளர உதவுகிறார்கள்.

அன்பு மென்மையானது - பாடல் வரிகள் 

அன்பு கருணையானது, என்னுடன் பாடுங்கள், உங்களுக்கு தெரியும்,நாம் பல நல்ல விஷயங்களை செய்ய முடியும் நம் அன்பினை வெளிப்படுத்த 

எனக்கு கதை படித்து சொல்ல மாட்டீர்களா 

இல்லை வெளியில் சென்று பந்து விளையாடலாம் நீங்கள் கீழே விழாமல் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுங்கள் 

 

நாம் சேர்ந்து செய்ய 

எவ்வளவோ விஷயமிருக்கு 

அன்பை வெளிப்படுத்த 

எவ்வளவோ வகைகள் இருக்கு 

பல முறை நாம் நம் அன்பை வெளிப்படுத்தலாம் உங்களுக்கு பகிர்ந்து கொள்ள நேரம் இருப்பின் 

 

நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் 

 

அன்பு மென்மையானது 

அன்பு கருணையானது 

என்னோடு பாடுங்கள் உங்களுக்கு தெரியும் 

உங்களோடு பகிர்ந்து கொள்வது சந்தோஷமே 

அன்பு மென்மையானது 

bottom of page